பாடல் மெட்டு : காகித ஓடம் கடலலை மீது
பாடல் : C.A. தேவராஜ்
கொரோனாவின் தாக்கம் :
ஆள்கின்ற நேரம்
யாவரும் வீட்டில்
இருந்திடல் வேண்டும்.....
தனிமை ஒன்றே மாபெரும் மருந்து
சமூக இடைவெளி காத்திடு உணர்ந்து.....(கொரோனாவின்...)
நோயின் பிடியும் தளர்ந்திட வேண்டும்
மருத்துவ உலகம் வளர்ந்திட வேண்டும்
விதியெனச் சொல்லி இருந்திட வேண்டாம்
விதியை வெல்லும் மனிதனே தெய்வம்.....(கொரோனாவின்...)
அரசு அலுவலர் உயர்குணம் போற்று...
காவல் துறையினர் கடமையை போற்று
ரேஷன் ஊழியர் சேவையை போற்று...
தூய்மை பணியாளர் தனிகுணம் போற்று...
கைகளை கழுவு உ டம்பினை கழுவு...
மனதையும் சேர்த்து கழுவிடு தம்பி
மருந்துகள் வேண்டி தவிக்குது உலகம்
மருந்துகள் வடிவில் நிறைந்திடு இறைவா..!!!
(கொரோனாவின்...)